என் மலர்

  நீங்கள் தேடியது "husband"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனைவி தற்கொலை வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  மேலூர்

  மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவருக்கும் ஜெயலட்சுமி(40) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி முகேஷ், சந்தோஷ் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் கடந்த 2-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ரமேஷ் கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ஜெயலட்சுமி விட்டத்தில் உள்ள ஊக்கில் சேலையில் தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.

  இதுகுறித்து மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஜெயலட்சுமியின் கணவர் ரமேசை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
  • கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .

  திருப்பூர் : 

  திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

  இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.

  அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

  இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, அந்த பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் கணவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
  • 20க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக புகார்.

  திருப்பூர் :

  திருப்பூர் எம் .எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி- . இவருக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே சுமதியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவர் சுமதி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றார்.

  தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட , அந்த பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் கணவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் திருவாரூர் காவல் நிலையம் என மாறி மாறி 20க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

  இதனால் மனமடைந்த சுமதி தனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
  • கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் வடபகுதியை சேர்ந்தவர் அருண்(வயது37).இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை இவருடைய மனைவி வித்யா(34). இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

  கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அருண் மனைவி வித்யாவை தாக்கியுள்ளார். இதனால் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு கணவன் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.
  • மேலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

  டி.என்.பாளையம்:

  டி.என்.பாளையம் அரச மரம் பஸ் நிறுத்தம் சென்னியப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார் (50). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி (45), ஒரு மகள் உள்ளார்.

  சூரியகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த 7 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர உணவு ஏதும் சாப்பிடாமல் அடிக்கடி மது அருந்தி வந்த சூரியகுமார் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். உடனே இறந்து கிடந்த சூரியகுமாரை அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக கோபி மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

  இது குறித்து தகவல் கிடைத்ததும் உறவினர்களுடன் வந்த ராஜேஸ்வரி தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு சூரியகுமார் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.

  இதனையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சூரியகுமார் உடலை பிரேதபரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோட்டா சால்னாவில் வி‌ஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர்.
  எட்டயபுரம்:

  தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  மாடசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

  நேற்று புரோட்டா சால்னாவில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து மாடசாமிக்கு இந்திரா கொடுத்தார். பின்னர் உணவில் மருந்து வாசனை வருவதை அறிந்த மாடசாமி அவரிடம் கேட்டபோது, வி‌ஷம் கலந்திருப்பது உறுதியானது. பின்னர் மாடசாமி அக்கம் பக்கத்தினரிடம் விபரத்தை கூறினார்.

  உடனடியாக அவர்கள் சோப்பு கரைசலை அவருக்கு கொடுத்து முதலுதவி செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதுகுறித்து புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

  எனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்வார். மேலும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். இதில் ஆத்திரமடைந்த நான் அவருக்கு சால்னாவில் வி‌ஷம் கலந்து கொடுத்தேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பின்னர் இந்திராவை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்கலை அருகே கணவன் கண் எதிரேயே மனைவி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  தக்கலை:

  தக்கலை அருகே மருதூர் குறிச்சி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் கென்ஸ் (வயது 35). இவர் கேரளாவில் காண்டிராக்டராக உள்ளார்.

  இவரது மனைவி மிஸ்பா. இவர்களுக்கு சாயல், ஜெர் சித் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திபு, திபுவென வீட்டிற்குள் புகுந்தனர்.

  வீட்டில் இருந்த மிஸ் பாவை கணவன் கண் எதிரிலேயே அந்த கும்பல் தூக்கிச் சென்றது. மனைவி மிஸ்பாவை தூக்கிச் செல்வதை பார்த்த கென்ஸ் தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அந்த கும்பல் கென்சை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தக்கலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மனைவியை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கடத்திச் சென்று விட்டது. அந்த கும்பலிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும். கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

  புகார் மனு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் எதிரேயே மனைவி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வில்லியனூர்:

  வில்லியனூர் பத்மினி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது41). இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வந்து தனது மகனுடன் வசித்து வந்தார். புதுவையில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலைபார்த்து லட்சுமி குடும்பத்தை நடத்தி வந்தார்.

  இதற்கிடையே லட்சுமிக்கு நெஞ்வலி மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை பெற்று வந்தும் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு மகன் தூங்கிய பின்னர் லட்சுமி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு தினகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரணி அருகே குடியாத்தம் சிரசு திரு விழாவை பார்க்க கணவர் அனுப்ப மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  ஆரணி:

  ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 27) கூலி தொழிலாளி. இவருக்கும் வேலூர் மாவட்டம் நெல்வாய் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

  இந்நிலையில் குடியாத்தத்தில் இன்று நடைபெறும் சிரசு திருவிழாவை காண்பதற்காக தனது தாய் வீட்டுக்கு அனுப்புமாறு பிரியா தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார். அதற்கு தமிழரசன் ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்.

  இதனால் தம்பதியிடையே தகாராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரியா இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எடப்பாடி அருகே கணவர் தனிக்குடித்தனம் வரமறுத்ததால் பள்ளி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.

  எடப்பாடி:

  கரூர் மாவட்டம், தாலியாபட்டி, வெள்ளிஆணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). தனியார் மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா(29) இவர்களுக்கு யாழினி (4) என்ற பெண் குழந்தை உள்ளது.

  தீபா சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

  அவர் எடப்பாடியை அடுத்த மொரப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தார். வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் யாழினி எல்.கே.ஜி. படித்து வந்தார்.

  இந்நிலையில் தற்போது கோடைவிடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற தீபா, அங்கு தனது கணவர் ராஜ்குமாரிடம், அடுத்த மாதம் குடும்பத்துடன் மொரப்பட்டி பகுதிக்கு சென்று குடித்தனம் நடத்துவோம் என வற்புறுத்தினார். ஆனால் அதற்கு ராஜ்குமார் சம்மதிக்கவில்லை. பெற்றோருடன் தான் இருப்பேன் என கூறினார். இதனால் தீபா மனவேதனை அடைந்தார். நேற்று அவர் மொரப்பட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி எடப்பாடிக்கு வந்தார்.

  இந்த நிலையில் ராஜ்குமார் தனது மனைவியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் தீபா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் உடனடியாக தீபா குடியிருக்கும் மொரப்பட்டிக்கு வந்தார். அங்கு தீபா வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் தீபாவை மீட்ட ராஜ்குமார், அவரை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

  தீபாவிற்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகவில்லை. இதனால் அவர் இறப்பு குறித்து கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

  இன்று காலை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த சங்ககிரி கோட்டாச்சியர் அமிர்தலிங்கம் தீபாவின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  தீபா இறந்தது குறித்து அவரது மகள் யாழினிக்கு தெரியவில்லை. இதனால் அவள் என் அம்மா எங்கே என்று உறவினர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக கூறினர். அம்மா எப்ப வருவாங்க என அடிக்கடி அப்பாவித்தனமாக கேட்கும் குழந்தையின் பரிதாப நிலை, காண்போரை கண்ணீரில் மிதக்க செய்தது.

  பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சேதராப்பட்டு:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் இளையராஜா. கோட்டக்குப்பத்தை அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 20). இருவரும் நேரு வீதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தனர்.

  இளையராஜாவும், சவுமியாவும் ஒரே கடையில் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

  இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லாமல் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு புது தென்றல் வீதியில் வசித்து வந்தனர்.

  இளையராஜா லோடு லாரி வாங்கி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நியா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.

  இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  இதில், மனவேதனை அடைந்த சவுமியா இரவு இளையராஜா தூங்கிய பின்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  காலையில் எழுந்து பார்த்த இளையராஜா மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுபற்றி சவுமியாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சவுமியாவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

  பின்னர் சவுமியாவின் தாய் சுமதி ஆரோவில் போலீசில் இளையராஜா மீது புகார் கொடுத்தார். அதில், இளையராஜா வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும், எனவே, அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று கூறி இருந்தார்.

  இந்த புகார் குறித்தும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா இதை சந்தேகத்துக்கிடமான மரணமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin