செய்திகள்

புதுவை மத்திய ஜெயிலில் வெடிகுண்டு வழக்கில் கைதான வாலிபரிடமிருந்து செல்போன் பறிமுதல்

Published On 2019-04-16 10:13 GMT   |   Update On 2019-04-16 10:13 GMT
புதுவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வழக்கில் கைதான வாலிபரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சேதராப்பட்டு:

புதுவை காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு பாகூர் பகுதியில் கூட்டு கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பலை பாகூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைதான 6 பேரிடமிருந்தும் நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் முக்கிய குற்றவாளியான கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27) என்பவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிறை வார்டன் கார்த்திகேயன் ரோந்து சென்றபோது வெடிகுண்டு வழக்கில் கைதான கார்த்திகேயன் அறையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கார்த்திகேயன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சிறை சூப்பிரண்டு கோபிநாத்திடம் சிறை வார்டன் புகார் கூறி பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஒப்படைத்தார்.

அதைத்தொடர்ந்து சிறை சூப்பிரண்டு காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News