செய்திகள்

தேனி மாவட்டத்தில் டிராக்டர், மாட்டு வண்டியில் மணல் திருடிய கும்பல்

Published On 2018-09-05 10:48 GMT   |   Update On 2018-09-05 10:48 GMT
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் மணல் திருடிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி:

போடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தேவாரம் புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர் அப்போது அம்பரப்பர் மலை அடிவாரப்பகுதியில் இருந்து டிராக்டரில் மணல் திருடி வந்த டி.புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார், ஊத்தம்பாறை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி சிலமலை அருகே மணியம்பட்டி ஓடையில் இருந்து டிராக்டரில் மணல் அள்ளி வந்த முத்துப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் தலைமையிலான போலீசார் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது டிராக்டரில் மணல் திருடி வந்த கூலையனூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கண்டமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையில் போலீசார் ஆற்றுக்கால் வைகை ஆற்றுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது வைகை ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்த அமச்சியாபுரத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், அய்யனார்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்தையா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மணல் திருடி வந்த டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News