லைஃப்ஸ்டைல்

தயிர் சாதத்திற்கு அருமையான வெஜிடபிள் ஊறுகாய்

Published On 2019-02-20 09:34 GMT   |   Update On 2019-02-20 09:34 GMT
எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முள்ளங்கிக் கலவை - ஒரு கப்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி - விரல் நீளத்துண்டு,
பூண்டு - 5 பல்,
புளி - எலுமிச்சை அளவு,
நல்லெண்ணெய் - அரை கப்,
உப்பு - தேவையான அளவு
(விருப்பப்பட்டால் பேரீச்சை துண்டுகள் சேர்க்கலாம்).



செய்முறை:

இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

வேக வைத்த காய்கறிகளை ஈரம் போக உலர விடவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கவும்.

இதனுடன் வேக வைத்து உலர வைத்த காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.

புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போனதும் கடுகு - வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்போது இறக்கி, பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

காய்கறிகளை சமைக்க நேரம் இல்லாதபோது கைகொடுக்கும் இந்த ஊறுகாய்.

சூப்பரான வெஜிடபிள் ஊறுகாய் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News