ஆட்டோமொபைல்

இந்தியாவில் பாதுகாப்பு வசதியுடன் வெஸ்பா ZX125 அறிமுகம்

Published On 2019-04-17 11:36 GMT   |   Update On 2019-04-17 11:36 GMT
சி.பி.எஸ். வசதி கொண்ட வெஸ்பா ZX125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Vespa



பிரீமியம் ஸ்கூட்டர்களில் பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர்கள் முதலிடத்தில் இருக்கின்றன. இந்நிறுவனத் தயாரிப்புகள் மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும் இதன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் இதை விரும்பி வாங்குவோர் அதிகம்.

அழகிய தோற்றம், குறைவான எடை, மிகச் சிறந்த செயல்திறன் ஆகியன இதை பலரும் விரும்பக் காரணமாக உள்ளது. இப்போது இந்நிறுவனம் தனது LX125 மாடல் ஸ்கூட்டர்களை சி.பி.எஸ். (கோம்பி பிரேக்கிங் சிஸ்டம்) வசதி கொண்டவையாக அறிமுகம் செய்துள்ளது. இதனால் இந்த மாடலுக்கு ZX125 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவில் வெஸ்பா ZX125 விலை ரூ.78,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் இது விலை குறைந்த மாடலாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் VXL125 மாடலில் சி.பி.எஸ். வசதி கொண்டதன் விலை ரூ.92,372 ஆக உள்ளது. இதைவிட சி.பி.எஸ். ZX. மாடல் விலை ரூ.95,668 ஆகும். பிரீமியம் மாடலான SXL.150 ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ.1.07 லட்சமாகும்.



ZX மாடலில் இரண்டு சக்கரங்களுக்கும் டிரம் பிரேக் வசதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. முன்பகுதியில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும், பின்புறம் மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 125 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 வால்வுகளைக் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் ஆகும். 

இந்த என்ஜின் 96 பி.ஹெச்.பி. திறனை 7,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 9.9 என்.எம். டார்க் @6,250 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பிரிவில் (125 சி.சி.) சுசுகி அக்சஸ் 125 (ரூ.61,858), சுசுகி பர்க்மன் ஸ்டிரீட் (ரூ.70,878), ஹோண்டா கிரேசியா (ரூ.66,231), டி.வி.எஸ். என்டார்க் 125 (ரூ.65,010) ஆகியவற்றுக்குப் போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News