search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தடைபெற்ற திருமணம் நடக்க
    X

    தடைபெற்ற திருமணம் நடக்க

    • ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.
    • அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

    குழந்தைச் செல்வம் பெற:

    திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதிய ருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

    சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:

    சனீஸ்வரரின் குரு பைரவர் என்ப தால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார்.

    எனவே, நாம் சனிக் கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

    தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:

    ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.

    அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

    6 சனிக் கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கை கூடும்.

    தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறை வேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

    Next Story
    ×