search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மனம் எனும் இறைவன்
    X

    மனம் எனும் இறைவன்

    • பெரும்பாலும் தாம் இறை எனும் தன்மை மறந்த மனதே நம்மை ஆள்கிறது.
    • இதுவே முதல் முன்னேற்றம். இதை பிடித்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற்றம் காணவேண்டும்.

    எல்லாம் வல்ல இறையே எங்கும் எங்கெங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது.

    எம்முள்ளே உயிராக மனமாக பஞ்சபூதமாக இருக்கிறது.

    மனதினை பிடித்து உள்சென்று இறை உணர இதுவரை உறைந்து கிடந்த பேரமைதி மெல்ல மெல்ல வெளி கிளம்புகிறது.

    பெரும்பாலும் தாம் இறை எனும் தன்மை மறந்த மனதே நம்மை ஆள்கிறது.

    எதில் மனம் இருக்கிறதோ அங்கே புரிதல் இருக்கிறது.

    எங்கே புரிதல் இருக்கிறதோ அங்கே எதை செய்தாலும் அதன் முழுமைவரை துல்லியமாக செய்ய இயலுகிறது.

    மனநாட்டமின்றி ஒரு வேலை செய்தல் அங்கே புரிதல் இல்லை எனவே முழுமைதன்மை துல்லியம் கிடைபதில்லை.

    இதற்கு எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ஒரு சாதாரண யோகாசனம் முதல் ஆயிரம் நாமங்களை

    உச்சரிக்கும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் வரை முழுமையாக அதில் வெற்றி கிட்டுவதற்கு மனம் எனும் இறையின் ஒரு அங்கம் இருந்தாக வேண்டியதாகிறது.

    மனம் அங்கேயே வைத்து ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் சொல்ல அங்கே சரஸ்வதி முதலில் வருவாள்சரஸ்வதி வருவாள்

    என்றால் சொல்லும் சொற்களும் வார்த்தைகளுக்கு உரித்தான அதனதன் அதிர்வு அலைகளும் பெறப்பெற்று சும்மா

    அட்சரசுத்தமாக வார்த்தைகள் ஸ்படிகம் உருண்டோடுவது போல உருண்டோடும்.

    இதுவே முதல் முன்னேற்றம். இதை பிடித்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற்றம் காணவேண்டும்.

    Next Story
    ×