search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    காசியில்  இருந்து  பல்லக்கு  மூலம் தருமபுரிக்கு வந்த கால பைரவர் சிலை
    X

    காசியில் இருந்து பல்லக்கு மூலம் தருமபுரிக்கு வந்த கால பைரவர் சிலை

    • தருமபுரியை ஆட்சி செய்த மன்னர் அதியமான், போரில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
    • அப்போது காவல் தெய்வமான கால பைரவரை வணங்க வேண்டும் என்றனர்.

    தொட்டில் பூஜை

    நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற அதியமான் கோட்டை

    ஸ்ரீதட்சிணகாசி கால பைரவருக்கு ருத்ரா அபிஷேகம் செய்து கால பைரவர் (உற்சவமூர்த்தி) தொட்டிலில் இட்டு

    வடுக பைரவ சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து தொட்டில் ஆட்டினால் இல்லத்தில்

    குழந்தை பாக்கியம் பெற்று வீட்டில் தொட்டில் ஆட்டலாம்.

    காசியில் இருந்து பல்லக்கு மூலம் தருமபுரிக்கு வந்த கால பைரவர் சிலை

    9ம் நூற்றாண்டில் எதிரிகளால் அதிக இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன.

    அப்போது தருமபுரியை ஆட்சி செய்த மன்னர் அதியமான், போரில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

    அப்போது காவல் தெய்வமான கால பைரவரை வணங்க வேண்டும் என்றனர்.

    ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படி மன்னர் அதியமான் காசியில் இருந்து சிலைகளை அதியமான் கோட்டைக்கு கொண்டு வந்து கால பைரவர் கோவிலை கட்டினார்.

    அந்த சமயத்தில் கால பைரவர் சிலையை காசியில் இருந்து தருமபுரிக்கு பல்லக்கு மூலம் தூக்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×