search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    எந்தவித பாரபட்சமுமின்றி அருளும் ஸ்ரீ லலிதாம்பிகை
    X

    எந்தவித பாரபட்சமுமின்றி அருளும் ஸ்ரீ லலிதாம்பிகை

    • தமது கருணை கண்களால் அருள் அலைகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறாளாம்.

    சூரியனிலிருந்து வெள்ளம் போல் வெளிவரும் அலைகள் கருணை அலைகளாய் எங்கும் எங்கெங்கும் வியாபிக்கின்றதாம்.

    அழகும் அறிவும் அன்பும் நிறைந்த கண்கள்.

    தாமரை இதழ் போன்ற கண்கள். கருணை ததும்பும் விழிகள்.

    செக்கச்செவேல் எனும் நிறம். ஸ்ரீ லலிதாம்பிகையின் கண்கள் சூரியனை போன்று செக்கச்செவேல் எனும்

    கதிர் அலைகளை கருணையோடு தமது விழிகள் வழியாக அள்ளி வீசிக் கொண்டிருக்கிறதாம்.

    எந்த பாரபட்சமும் இன்றி இவன் என்னுனைய பக்தனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இவன் மானுடன்

    இவன் அசுரன் இவன் தேவன் இவன் மிருகம் இவன் மரம்செடிகொடி புற்கள் என யாருக்கும் எதற்கும் எந்தவித

    பாகுபாடின்றி தமது விழி ததும்பி வழியும் கருணை பார்வையால் எங்கும் எங்கெங்கும் வியாபித்து கொண்டேயிருக்கிறாளாம்.

    தமது கருணை கண்களால் அருள் அலைகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறாளாம்.

    நீ யாராக இருந்தாலும் எதுவாகயிருந்தாலும் எமது கருணைப் பார்வை என்பது மாறாது அது எமது இயல்பு அது எமது

    தன்மை சாந்தம் அன்பு முழுமை தெளிவு இவை எல்லாம் சேர்ந்த ஒரு பார்வை எமது பார்வை கொடுத்துக்

    கொண்டேயிருப்பது என்பது எம்முள் உள்ள வற்றா ஜீவகொடை நதியின் தன்மை அது ஷன பொழுதும் மாறாது

    என தமது அருள் கருணையை அலைகளை அன்போடு அள்ளி வீசிக்கொண்டிருக்கிறாள் சாந்த ஸ்வரூபி.

    Next Story
    ×