search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சந்திர பலத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் சுப முகூர்த்தங்கள்
    X

    சந்திர பலத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் சுப முகூர்த்தங்கள்

    • சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார்.
    • சூரியன் இருக்கும் இடம் முதல் 7ம் வீடு வரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம்.

    சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார்.

    ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் ஆகிறது.

    சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் இணைந் திருக்கும் நாளை அமாவாசை என்கிறோம்.

    சூரியனுக்கு 7 ல் சந்திரன் சஞ்சரிக்கும் நாளை பௌர்ணமி என்கிறோம்.

    சூரியன் இருக்கும் இடம் முதல் 7ம் வீடு வரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம்.

    7ம் வீடு முதல் 12ம் வீடுவரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை தேய்பிறை என்கிறோம்.

    இந்த இடைவெளி நாட்களை கொண்டுதான் திதி நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அதே போல சந்திரனுக்கும், சூரியனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது .

    சந்திரனின் பலத்தைக் கொண்டுதான் திருமண முகூர்த்தங்களும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சந்திரன் ஜெனன காலத்தில் நின்ற ராசியை ஜென்ம ராசி என்பதுபோல ஜென்ம ராசியைக் கொண்டுதான் கோட்சார ரீதியாக மற்ற கிரகங்களின் சஞ்சார பலனை அறிய முடியும்.

    Next Story
    ×