search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்
    X

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

    ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Realme



    ஒப்போவின் ரியல்மி பிராண்டு இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களும் TENAA வலைதளத்தில் RMX1851 மற்றும் RMX1901 மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று ரியல்மி 3 ப்ரோ என அழைக்கப்படலாம். பெயருக்கு ஏற்றார்போல் இது ரியல்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம். இதே பிராசஸர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ், சியோமி Mi 9 மற்றும் இதர டாப் எண்ட் ஸ்மார்ட்பன்களில் வழங்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, மற்றும் இரண்டாவது பிரைமரி கேமரா ஒன்றும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த ஸ்மார்ட்போன் 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மியின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் வெளியிடுவது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவில் ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விலை RMB 2999 (இந்திய மதிப்பில் ரூ.31,100) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 3 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், அட்ரினோ 616 GPU கிராஃபிக்ஸ், கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ வசதி மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″ வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: TENAA
    Next Story
    ×