search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 வெளியீட்டு விவரம்
    X

    வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 வெளியீட்டு விவரம்

    ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் இயர்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods2



    ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் சேவை சார்ந்த புதிய அறிவிப்புகளை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆசிய பசிபிக் சந்தைக்கான விநியோக குழுவில் இடம்பெற்றிருப்போரிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 சாதனத்தையும் மார்ச் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய ஏர்பாட்ஸ் மார்ச் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

    இதுதவிர வேறு எந்த ஹார்டுவேர் அறிவிப்புகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறாது என தெரிகிறது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில் மார்ச் 28 ஆம் தேதி தற்சமயம் சந்தைகளில் கிடைக்கும் ஏர்பாட்ஸ் 2 விற்பனை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம் ஏர்பாட்ஸ் 2 விற்பனையை ஊக்குவிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 



    புதிய ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ், சிரி இன்டகிரேஷன் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ ஏர்பாட்ஸ் 2 சாதனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தார். ஏர்பாட்ஸ் 2 அறிமுகமானதும் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட மற்றொரு மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    இந்த மாடல் 2020 ஆண்டின் முதல் காலண்டில் அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் ஐபோன் பயன்படுத்துவோரில் சுமார் 5 சதவிகிதத்திற்கும் குறைவானோர் ஏர்பாட்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். 

    உலகம் முழுக்க 100 ஐபோன் பயனர்கள் இருக்கும் நிலையில், புதிய வடிவமைப்புடன் ஏர்பாட்ஸ் விற்பனை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
    Next Story
    ×