search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசுஸ் கேமிங் நோட்புக்-கள் இந்தியாவில் அறிமுகம்
    X

    அசுஸ் கேமிங் நோட்புக்-கள் இந்தியாவில் அறிமுகம்

    அசுஸ் நிறுவனத்தின் புதிய டியூரபிள் கேமிங் நோட்புக்-கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #ASUS #gaming #Laptop



    அசுஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய TUF கேமிங் நோட்புக்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய TUF நோட்புக்-கள் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர் மற்றும் Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவற்றில் 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் நானோஎட்ஜ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் டி.டி.எஸ். சரவுன்ட் சவுன்ட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    புதிய அசுஸ் TUF FX505 மற்றும் TUF FX705 நோட்புக்-களில் MIL-STD-810G தர உறுதித் தன்மை கொண்டிருக்கிறது. இவற்றுடன் அசுஸ் நிறுவனம் TUF டெஸ்க்டாப் FX10CP மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த டெஸ்க்டாப் மாடலில் இன்டெல் கோர் i7 பிராசஸர் மற்றும் ஐசோலேட் செய்யப்பட்ட ஏர் சேம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அசுஸ் TUF FX505, FX705, TUF டெஸ்க்டாப் FX10CP சிறப்பம்சங்கள்:

    அசுஸ் TUF FX505 மாடலில் 15.6 இன்ச் LED-பேக்லிட் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் ஆன்டி-கிளேர் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி, 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மற்றும் Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 6 ஜி.பி. வி.ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    அசுஸ் TUF FX505 போன்று இல்லாமல், TUF FX705 மாடலில் 17.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1920x1080 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர், 8 ஜி.பி. ரேம், Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 6 ஜி.பி. வி.ரேம் கொண்டிருக்கிறது.



    புதிய TUF நோட்புக் மாடல்களை அசுஸ் நிறுவனம் MIL-810G மிலிட்டரி தரத்தில் உருவாக்கியிருக்கிறது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் பேக்லிட் கீபோர்டு, WASD கீகேப் டிசைன் கொண்டிருக்கிறது. 

    அசுஸ் TUF FX507 மற்றும் TUF FX705 நோட்புக்-களில் 2T2R MU-MIMO 802.11ac வைபை வசதி, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. டைப்-ஏ 2.0 மற்றும் 3.1, ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் கொண்டிருக்கிறது. 

    இத்துடன் 2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அரே மைக்ரோபோன், டி.டி.எஸ். ஹெட்போன்: X மற்றும் 7.1 சேனல் விர்ச்சுவல் சரவுன்ட் சவுன்ட் அனுபவம் வழங்குகிறது. மேலும் அசுஸ் ஹைப்பர்கூல் தெர்மல் தொழில்நுட்பம், ஆன்டி-டஸ்ட் கூலிங் சிஸ்டம், ஃபேன் ஓவர்பூஸ்ட் தொழில்நுட்பம், டூயல்-ஃபேன் கூலிங் சி.பி.யு. மற்றும் ஜி.பி.யு. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    அசுஸ் TUF டெஸ்க்டாப் FX10CP  மாடலில் இன்டெல் கோர் i7 8700 பிராசஸர், Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு, 32 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. ஹார்டு டிரைவ், 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி. கொண்டிருக்கிறது. இந்த டெஸ்க்டாப் மாடலிலும் தெர்மல் வடிவமைப்பு 802.11ac Wave 2 வைபை 2x2 ஆன்டெனாக்களை கொண்டுள்ளது.

    அசுஸ் TUF FX505, FX705, TUF டெஸ்க்டாப் FX10CP இந்திய விலை:

    அசுஸ் TUF FX505 விலை இந்தியாவில் ரூ.79,990 என்றும், FX705 மாடலின் துவக்க விலை ரூ.1,24,990 என்றும் TUF டெஸ்க்டாப் FX10CP துவக்க விலை ரூ.91,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்புக் மற்றும் டெஸ்க்டாப் மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×