search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் - ஃபேஸ்புக் பங்குதாரர்கள் அழுத்தம்
    X

    மார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் - ஃபேஸ்புக் பங்குதாரர்கள் அழுத்தம்

    ஃபேஸ்புக் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலக மார்க் சூக்கர்பர்க்கிற்கு அந்நிறுவன பங்குதாரர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சூக்கர்ப்ர்க் விலக வேண்டும் என அந்நிறுவன பங்குதாரர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

    பங்குதாரர்களாக பொருளாலர்கள், மூத்த முதலீட்டு அலுவலர்கள், டிரில்லியம் அசெட் மேனேஜ்மென்ட் எனும் தனியார் நிறுவனம் உள்ளிட்டவை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பதவிகள் பிரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

    ஃபேஸ்புக் நிறுவன துணை நிறுவனரான மார்க் சூக்கர்பர்க் தற்சமயம் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட இரண்டு பொறுப்புகளை வகிக்கிறார்.

    "ஃபேஸ்புக்கின் நிர்வாக அமைப்பு முதலீட்டாளர்களுக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. முதலீட்டாளர் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பங்குதாரர் மதிப்பை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்," என இல்லினியோஸ் மாநில பொருளாலர் மைக்கேல் ஃபிரெரிக்ஸ் தெரிவித்துள்ளார். 



    தொடர் சர்ச்சைகளை ஃபேஸ்புக் கையாண்ட விதம் தான் பங்குதாரர்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கிறது.

    ஃபேஸ்புக் தொடர் சர்ச்சைகளின் துவக்கம் கேம்பிரிட்ஜ் அனாலடிகா விவகாரமாக அமைந்தது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 8.7 கோடி பேரின் விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது அம்பலமானது. இதைத் தொடர்ந்து ஹேக்கர்கள் கைவரிசையால் சுமார் மூன்று கோடி பேரின் விவரங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து திருடப்பட்டது.

    தற்சமயம் எழுந்து இருக்கும் கோரிக்கைக்கான வாக்கெடுப்பு மே 2019 இல் நடைபெற இருக்கும் ஃபேஸ்புக் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் நடைபெறலாம், எனினும் இந்த கோரிக்கை நிறைவேறும் வாய்ப்புகள் குறைவே. சூக்கர்பர்க் மற்றும் சிறு நிறுவனங்கள் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமைகளில் சுமார் 70 சதவிகிதத்தை கொண்டுள்ளனர்.

    முன்னதாக இதேபோன்ற சூழல் கடந்த ஆண்டு ஏற்பட்ட போது சுமார் 51 சதவிகித பங்குதாரர்கள் ஆதரவளித்தனர்.
    Next Story
    ×