search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
    X

    இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்ததை போன்று புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    நோக்கியா 6 (2018), நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதோடு அவற்றின் விலை மற்றும் விற்பனை தேதி உள்ளிட்டவை தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் கொண்டுள்ளது. இத்துடன் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, 6000 சீரிஸ் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் நோக்கியாவின் டூயல் சைட், போத்தி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 18:9 ரக ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், மேெட்டல் யுனிபாடி வடிவைப்பு, 6000 சீரிஸ் அலுமினியம் மற்றும் 3800 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் QHD pOLED டிஸ்ப்ளே, கிளாஸ் பாடி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, பின்புறம் கைரேகை சென்சார், முன்புறம் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3260 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 6 (2018) சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட்
    - அட்ரினோ 508 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    நோக்கியா 7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3800 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    நோக்கியா 8 சிரோக்கா சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 2560x1440 பிக்சல் pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3260 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
    - Qi வயர்லெஸ் சார்ஜிங்



    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா 6 (2018) பிளாக்/காப்பர், வைட்/ஐயன் மற்றும் புளு/ கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஆஃப்லைன் மற்றும் நோக்கியா மொபைல் ஆன்லைன் வலைத்தளத்தில் துவங்குகிறது.

    நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் / காப்பர் மற்றும் வைட் / காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.25,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்  அமேசான் வலைத்தளம், ஆஃப்லைன் மற்றும் நோக்கியா மொபைல் வலைத்தளத்தில் நடைபெற இருக்கிறது.

    நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் நோக்கியா 8 சிரோக்கோ ஏப்ரல் 30-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், நோக்கியா மொபைல் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இருந்து புதிய நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும்.
    Next Story
    ×