search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சக்திவாய்ந்த சிப்செட் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல்

    சியோமி நிறுவனம் மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P60 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. 

    சியோமி மட்டுமின்றி விவோ மற்றும் மெய்சூ போன்ற நிறுவனங்களும் மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்போ நிறுவனம் தனது ஆர்15 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஹீலியோ P60 சிப்செட் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய சியோமி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. எனினும் மீடியாடெக் சிப்செட் கொண்ட பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது. 



    அந்த வகையில் மற்றொரு சியோமி ஸ்மார்ட்போனில் 12 என்எம் மொபைல் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இந்த சிப்செட் ஹீலியோ P70 என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட ஹீலியோ P60 ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட ஏதுவாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஹீலியோ P60 பிராசஸர்களில் எட்டு கோர்கள் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய 14 என்எம் ரக சிப்செட்களை விட புதிய 12 என்எம் சிப்செட் குறைந்தளவு மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிப்செட்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை இயக்க பிரத்யேக பிராசசிங் யூனிட் தேர்க்கப்பட்டுள்ளது. ஹீலியோ P60 சிப்செட் ஹீலியோ P23 ரக பிராசஸர்களை விட 25% வரை கூடுதல் திறன் கொண்டதாகும்.
    Next Story
    ×