search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 4 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 4 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

    எனர்ஜைசர் நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #MWC2018
    பார்சிலோனா:

    எனர்ஜைசர் நிறுவனத்தின் அவ்னிர் மொபைல்ஸ் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 

    எனர்ஜைசர் பவர் மேக்ஸ் P16K ப்ரோ, எனர்ஜைசர் பவர் மேக்ஸ் P490S, எனர்ஜைசர் ஹார்டுகேஸ் H590S என அழைக்கப்படும் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களிலும் 18:9 ரக டிஸ்ப்ளே மற்றும் நான்கு கேமரா (2 பிரைமரி, 2 செல்ஃபி) செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பவர் மேக்ஸ் P16K ப்ரோ ஸ்மார்ட்போனில் 16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.



    எனர்ஜைசர் பவர் மேக்ஸ் P16K ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் 18:9 ரக IPS LCD டிஸ்ப்ளே 
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P25 சிப்செட்
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 16 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா 
    - 13 எம்பி + 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றாலும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.



    எனர்ஜைசர் பவர் மேக்ஸ் P490S சிறப்பம்சங்கள்:

    - 4.95 இன்ச் FWVGA 480x854, 18:9 ரக டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் MT6739 சிப்செட்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 8 எம்பி + 0.3 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி + 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    எனர்ஜைசர் பவர் மேக்ஸ் P490S ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.



    எனர்ஜைசர் ஹார்டுகேஸ் H590S சிறப்பம்சங்கள்:

    - 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் மீடியாடெக் P23 சிப்செட்
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கைரேகை சென்சார்
    - 16 எம்பி + 0.3 எம்பி பிரைமரி கேமரா
    - 13 எம்பி + 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 5800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
    - 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    எனர்ஜைசர் ஹார்டுகேஸ் H590S ஸ்மார்ட்போனில் IP68 வாட்டர் மற்றும் ஷாக் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனும் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MWC2018 #smartphone
    Next Story
    ×