search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2200 வரை கேஷ்பேக் வழங்கும் ஜியோ ஃபுட்பால் ஆஃபர்
    X

    ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2200 வரை கேஷ்பேக் வழங்கும் ஜியோ ஃபுட்பால் ஆஃபர்

    ரிலையன்ஸ் ஜியோ சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.2200 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபுட்பால் ஆஃபர் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ.2,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் விற்பனையாகும் 22 ஸ்மார்ட்போன் பிராண்டுகளை சேர்ந்த பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என ஜியோ அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் வாங்குவதோடு ஜியோ எண்களுக்கு தொடர்ச்சியான ரீசார்ஜ் செய்வோருக்கு கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதை மேற்கொள்ள ஜியோ 4ஜி சேவையை ஸ்மார்ட்போன்களில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். வாடிக்கைாயளர்கள் முதற்கட்டமாக மார்ச் 31, 2018-ம் தேதிக்குள் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்ததும் ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்கள் வடிவில் மைஜியோ செயலியில் கிரெடிட் செய்யப்படும்.



    முதற்கட்டமாக சாம்சங், எல்.ஜி., நோக்கியா, மோட்டோரோலா, சியோமி, பிளாக்பெரி, அசுஸ், ஹூவாய், பானசோனிக், ஸ்வைப், கோமியோ, செல்கான், சியோக்ஸ், இன்டெக்ஸ், ஆல்காடெல், மைக்ரோமேக்ஸ், 10.ஆர், லைஃப், ஜிவி, சென், ஐஊமி மற்றும் சென்ட்ரிக் நிறுவனங்களின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோ கேஷ்பேக் பொருந்தும்.

    முன்னதாக ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இதே போன்ற கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளவும், ஸ்மார்ட்போன் விற்பனையை ஊக்குவிக்கவும் டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இணைந்து கேஷ்பேக் மற்றும் இதர சலுகைகளை அறிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
    Next Story
    ×