search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ முத்திரை விவகாரம்- டோனிக்கு ஆதரவு தெரிவித்த கவுதம் காம்பீர்
    X

    ராணுவ முத்திரை விவகாரம்- டோனிக்கு ஆதரவு தெரிவித்த கவுதம் காம்பீர்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராணுவ முத்திரை பதித்த கையுறை அணிந்து விளையாடிய டோனிக்கு ஆதரவாக கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடுகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான டோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் விளையாடினார். இந்த காட்சி டெலிவி‌‌ஷனில் ஒளிபரப்பானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது. இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வகிக்கும் டோனி துணை ராணுவ சிறப்பு படையினரின் பாலிதான் (தியாகத்தை குறிக்கும் அடையாளம்) என்ற முத்திரையை தனது கையுறையில் (கிளவ்ஸ்) பதித்து இருந்தார்.

    ஐசிசி விதிப்படி அரசியல், மதம், ராணுவம் சார்ந்த குறியீடுகளை வீரர்கள் எந்த வகையிலும் களத்தில் பயன்படுத்தக்கூடாது. அதனால் டோனியின் விக்கெட் கீப்பிங் கையுறையிலிருந்து அந்த குறியீட்டை நீக்க டோனிக்கு அறிவுறுத்துமாறு பிசிசிஐ-க்கு ஐசிசி அறிவுறுத்தியிருந்தது. இந்த விஷயத்தில் பல ரசிகர்களும் பிரபலங்களும் டோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் தற்போதைய எம்பி-யுமான கவுதம் காம்பீர், “போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த வேண்டியதுதான் ஐசிசி-யின் வேலையே தவிர, யார் என்ன லோகோ பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதல்ல. எனவே அந்த வேலையை சரியாக பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத விஷயத்தை பெரிதாக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×