search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவ தயார் - பாகிஸ்தான் மந்திரி
    X

    இந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவ தயார் - பாகிஸ்தான் மந்திரி

    ஜெய்‌ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. இதில் ஆதாரங்கள் இருந்து, அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று தகவல் ஒளிபரப்பு மந்திரி பவாட் சவுத்ரி கூறி உள்ளார். #PulwamaAttack
    இஸ்லாமாபாத்:

    கா‌ஷ்மீர் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்பு மந்திரி பவாட் சவுத்ரி கூறியதாவது:-

    எந்த தாக்குதலும் நடந்த உடனேயே இந்தியா, பாகிஸ்தானை குற்றம்சாட்டுகிறது. அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் இந்த குற்றச்சாட்டில் எந்த அர்த்தமும் இல்லை. இரண்டு பக்கமும் உள்ள சில சக்திகள் இயல்பு நிலையை விரும்புவதில்லை. அந்த பிராந்தியத்தின் உள்நாட்டு போராட்டம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானை குற்றம்சாட்ட கூடாது.



    மிகவும் சாதகமான நாடுகள் அந்தஸ்தில் இருந்து பாகிஸ்தானை நீக்கியது துரதிர்‌ஷ்டவசமானது. ஜெய்‌ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. இதில் ஆதாரங்கள் இருந்து, அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, ‘உலகில் வன்முறை எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் அதனை கண்டிக்கிறது’ என்றார். #PulwamaAttack

    Next Story
    ×