search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேச சிறையில் வாடும் இந்தியரை மீட்டுத் தரவேண்டும் - பிரதமரிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்
    X

    வங்காளதேச சிறையில் வாடும் இந்தியரை மீட்டுத் தரவேண்டும் - பிரதமரிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்

    வங்காளதேசத்தின் சிறையில் வாடும் இந்திய முதியவரை மீட்டுத்தரும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். #BangladeshPrison #PhalgunArengh #PMModi
    டாக்கா:

    மேகாலயா மாநிலத்தின் வெஸ்ட் கரோ ஹில்ஸ் பகுதியை ஹதிமாரா கிராமத்தை சேர்ந்தவர் பால்கன் அரேங் (66). கடந்த மே மாதம் வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகளால் இவர் கடத்தப்பட்டார்.

    இதுதொடர்பாக அவரது மனைவி பொன்ஜி சங்மா போலீசில் புகார் செய்தார், புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
    விசாரணையில், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுபட்டு உடல்நிலை சரியில்லாத நிலையில் பால்கன் அரேங்கை கண்ட கிறிஸ்டியன்பாரா கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வங்காளதேசத்தின் ஷெர்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீபோர்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக பால்கன் அரேங் குடும்பத்தினர் கூறுகையில், வங்காளதேசத்தின் சிறையில் உள்ள பால்கன் அரேங்கை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு உதவ வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும்  என வலியுறுத்தியுள்ளனர். #BangladeshPrison #PhalgunArengh #PMModi
    Next Story
    ×