search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் கற்பழிப்பு, கொலை குற்றங்களுக்காக 13 மரண தண்டனையை தலையில் சுமக்கும் காமுகன்
    X

    பாகிஸ்தானில் கற்பழிப்பு, கொலை குற்றங்களுக்காக 13 மரண தண்டனையை தலையில் சுமக்கும் காமுகன்

    பாகிஸ்தானில் 9 குழந்தைகளை கற்பழித்து, அவற்றில் 4 குழந்தைகளை கொன்ற காமுகனுக்கு 13 மரண தண்டனைகளுடன் ஏராளமான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.#DeathSentence
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கசூர் நகரை சேர்ந்த 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பாக இம்ரான் அலி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு லாகூர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் அலிக்கு மரண தண்டனையும், 7 ஆண்டு சிறை தண்டனையும், 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

    தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் 8 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அதில் 3 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதும் தெரிந்தது.



    இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 3 சிறுமிகளை கொன்ற வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 சிறுமிகளை கொன்ற வழக்கில் இம்ரான் அலிக்கு 12 மரண தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

    மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்த தொகையில் இருந்து 30 லட்சம் ரூபாயை கொலை செய்யப்பட்ட 3 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×