search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாராவது எதிர்த்து நில்லுங்கள் சவாலுக்கு நான் தயார் - எகிப்து அதிபர் அல்சிசி
    X

    யாராவது எதிர்த்து நில்லுங்கள் சவாலுக்கு நான் தயார் - எகிப்து அதிபர் அல்சிசி

    எகிப்து நாட்டில் இம்மாத இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், “100 கட்சிகள் நாட்டில் இருக்கின்றன. என்னை எதிர்த்து யாராவது போட்டியிடுங்கள்” என தற்போதைய அதிபர் அப்தேல் ஃபாட்டா அல்சிசி தெரிவித்துள்ளார்.
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26 முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. தற்போதைய அதிபர் அப்தேல் ஃபாட்டா அல்சிசி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர் சிறையில் உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இதனால், அல்சிசியை எதிர்த்து முக்கிய பிரமுகர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    முன்னாள் ராணுவத் தளபதியான அல்சிசிக்கு தற்போது மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. 2014 முதல் அதிபராக இருந்து வரும் அவர் துணை பிரதமர், ராணுவ மந்திரி பொறுப்புகளை முன்னதாக வகித்துள்ளார்.

    தனக்கு போட்டியாளர்கள் இருக்கக்கூடாது என்பதற்காக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சிறையிலடைத்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இது தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    “எல்லாவற்றுக்கும் என்னை குறை கூறுகின்றீர்கள். நான் எதையுமே செய்யவில்லை. இந்த நாட்டில் 100 கட்சிகள் உள்ளன. யாராவது என்னை எதிர்த்து போட்டியிட சொல்லுங்கள். சவாலுக்கு நான் தயார்” என அல்சிசி கூறியுள்ளார். 

    அந்நாட்டு சட்டப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவிகித வாக்குகளை பெறவில்லை என்றால் ஏப்ரல் மாதத்தில் மறு தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #TamilNews
    Next Story
    ×