search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்புகளுடன் வாழ்க்கை நடத்தியவரின் உயிரை காவு வாங்கிய ராஜநாகம்
    X

    பாம்புகளுடன் வாழ்க்கை நடத்தியவரின் உயிரை காவு வாங்கிய ராஜநாகம்

    பாம்புகளை பிடித்து கொஞ்சி விளையாடுவது, முத்தமிடுவது என மக்களிடையே மிகவும் பிரபலமான கோலாலம்பூரை சேர்ந்த அபு ஜாரின் ஹுசைன் பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்தவர் அப் ஜாரின் ஹுசைன் (33). தீயணைப்புத்துறை வீரரான இவர் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர். பிடிப்பதோடு மட்டுமில்லாமல், பாம்பிற்கு முத்தமிடுவது, அவற்றுடன் சகஜமாக பழகுவது, அவற்றுடனே தூங்குவது என அசாத்திய செயல்களை செய்வதில் வல்லவர். எவ்வளவு கொடிய விஷ பாம்பாக இருந்தாலும், லாவகமாக பிடித்து அதை உயிரியல் பூங்காவில் கொண்டு விடும் பணியை அவர் செய்து வந்தார். பாம்புகளுடன் இவர் விளையாடும் வீடியோ யூடியூப்பில் மிகவும் பிரபலமாகும். இவரின் வீட்டிலும் பாம்புகளை சர்வ சாதரணமாக உலவும்.
     


    இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொடிய விஷம் உள்ள ராஜநாகம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அதை பிடிக்க அபு முயற்சித்த போது அந்த பாம்பு அவரை கடித்தது. அதனால், அவரது உடல் முழுவதும் விஷம் ஏறியது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

    ராஜ நாக பாம்புகளுடன் கொஞ்சி விளையாடி பொழுதை கழித்து வந்த அபு, அதே ராஜ பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்புகளை எப்படி பிடிப்பது என்பதை அபு, அவரின் தந்தையிடம் கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #SnakeWhisperer #AbuZarinHussin #Tamilnews 
    Next Story
    ×