search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாள நாட்டின் அடுத்த பிரதமராக சர்மா ஒலி தேர்வு
    X

    நேபாள நாட்டின் அடுத்த பிரதமராக சர்மா ஒலி தேர்வு

    நேபாள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த சர்மா ஒலி அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #Nepal #SharmaOli #PrimeMinister
    காத்மண்டு:

    மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் சென்டர் கட்சிகள் அடங்கிய கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற மேல்சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. 6 மாகாணங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 59 இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்களையும் கைப்பற்றின. நேபாள காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், இதர கட்சிகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி தலைவரான சர்மா ஒலி அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான சுரேந்திர பாண்டே தெரிவித்துள்ளார். சர்மா ஒலி ஏற்கனவே கடந்த 2015 அக்டோபர் 11-ம் தேதியிலிருந்து, 2016 ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நேபாள நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Nepal #SharmaOli #PrimeMinister #tamilnews
    Next Story
    ×