search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் முக்கிய விருது நிகழ்ச்சியை தவிர்க்கும் டிரம்ப் - சமீபத்திய இனவெறி மோதல்கள் காரணமா?
    X

    அமெரிக்காவின் முக்கிய விருது நிகழ்ச்சியை தவிர்க்கும் டிரம்ப் - சமீபத்திய இனவெறி மோதல்கள் காரணமா?

    அமெரிக்காவின் முக்கிய கென்னடி விருது விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் பங்கேற்க மாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முக்கிய கென்னடி விருது விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் பங்கேற்க மாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் கலைத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்காக மறைந்த முன்னாள் அதிபர் கென்னடி பெயரால் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படும். அமெரிக்காவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த விருது வழங்கும் விழாவில் அதிபர் மற்றும் அதிபரின் மனைவி ஆகியோர் கலந்து கொள்வர்.

    ஆனால், இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கலந்து கொள்ளமாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெர்ஜீனியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற இனமோதல்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்த டிரம்ப், இனவெறி எதிர்ப்பாளர்களையும் கடுமையாக சாடியிருந்தார்.

    இதனால், பலர் டிரம்ப்பை சரமாரியாக விமர்சித்து வந்தனர். மேலும், விருதுகளுக்கான நிதியையும் டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பட்ஜெட்டில் குறைத்து விட்டதாக கூறி பல்வேறு கலைஞர்கள் டிரம்ப்பை குற்றம் சாட்டியிருந்தனர். இந்த சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் இந்த விழாவில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறிவருகின்றன.
    Next Story
    ×