search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 மாதங்களுக்கு பிறகு கோதண்டராமர் சிலை பெங்களூரு புறப்பட்டது
    X

    3 மாதங்களுக்கு பிறகு கோதண்டராமர் சிலை பெங்களூரு புறப்பட்டது

    தற்காலிக பாதை அனைத்தும் அமைக்கப்பட்டு விட்டதால் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது. #KothandaramanStatue
    ஓசூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 64 அடி உயரம் மற்றும் 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட கோதண்டராமர் சிலை, கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா என்ற இடத்தில் 108 அடி உயரத்தில் நிறுவப்படுவதற்காக பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டது.

    வழியில் பல்வேறு ஊர்களில், பல்வேறு தடைகளை தாண்டி, கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு வந்தது. அங்கிருந்து பெங்களூரு செல்லும் வழித்தடங்களில் உள்ள தரைப்பாலங்களை கடந்து செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

    இந்தநிலையில், தற்காலிக பாதை அனைத்தும் அமைக்கப்பட்டு விட்டதால் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட லாரி இரவு சூளகிரி அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது திடீரென லாரியின் சில டயர்கள் பஞ்சர் ஆனது. இதன் காரணமாக லாரி அங்கு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வேறு டயர் மாற்றும் பணி நடைபெற்றது. #KothandaramanStatue
    Next Story
    ×