என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம்
Byமாலை மலர்12 Feb 2019 4:08 AM GMT (Updated: 12 Feb 2019 4:08 AM GMT)
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை தரும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #PMModi #BJP
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி தமிழகம் வந்த மோடி, மதுரையில் நடைபெற்ற விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அதன்பின்னர் கடந்த 10-ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். மேலும், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதிக்குப் பதில், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #PMModi #BJP

அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 19-ந் தேதி மீண்டும் தமிழகம் வரும் மோடி, கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதிக்குப் பதில், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #PMModi #BJP
Next Story
×