search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேர்மன் பதவியை ராஜினாமா செய்வேன் - புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் மிரட்டல்
    X

    சேர்மன் பதவியை ராஜினாமா செய்வேன் - புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் மிரட்டல்

    சேர்மன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். #Congress

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலன்.

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சேர்மனாக பாலன் எம்.எல்.ஏ. பதவி வகித்து வருகிறார். சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் சீகல்ஸ், லே கபே மற்றும் நோணாங்குப்பம், ஊசுடு கனகன் ஏரி ஆகிய பகுதிகளில் படகு குழாம் இயங்கி வருகிறது.

    இதில் நோணாங்குப்பம் படகு குழுமம் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் பகுதியாகும். இந்த நிலையில் நோணாங்குப்பம் படகு குழாம் அருகே தனியார் நிறுவனம் படகு குழுமம் அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    விதிமுறைகளை மீறி அரசு தனியாருக்கு படகு குழாம் நடத்த அனுமதி வழங்கி உள்ளதாக கூறி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் படகுகுழாம் இயங்க அனுமதி அளித்தால் தனது சேர்மன் பதவியை ராஜினாமா செய்வேன் என பாலன் எம்.எல்.ஏ. கூறினார்.

    தனியார் படகு குழாம் அமைக்க கூடாது என சட்டசபையில் வலியுறுத்தினேன். ஆனால் துறை செயலாளர் அனுமதி கொடுத்தே தீருவேன் என கூறுகிறார்.

    புதுவையில் ஏற்கனவே 13 பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டது. தற்போது சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகுகுழாம் மூலமே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தையும் மூடுவதற்கு திட்டமிடுகின்றனர்.

    தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தால், வருவாய் இழப்பு ஏற்படும் அதன் பின்பு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிறுவனத்திற்கு நான் ஏன் சேர்மனாக இருக்க வேண்டும்.

    என் பதவி காலத்தில் பி.டி.டி.சி. அழியக்கூடாது. தனியார் படகு குழாமிற்கு அனுமதி அளித்தால், சேர்மன் பதவியை ராஜினாமா செய்வேன் என முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரிடம் கூறி உள்ளேன். அவர்கள் தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். #Congress

    Next Story
    ×