search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை-சூறைகாற்று: என்எல்சி ஊழியர் உள்பட 3 பேர் பலி
    X

    கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை-சூறைகாற்று: என்எல்சி ஊழியர் உள்பட 3 பேர் பலி

    கஜா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் என்எல்சி ஊழியர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #rain #gajacyclone
    கடலூர்:

    கஜா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பலத்த மழை கொட்டியது. இந்த மழை விடிய, விடிய பெய்தது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மேல் மாத்தூர் பகுதியை சேர்ந் தவர் ராஜேந்திரன். அரவது மனைவி அய்யம்மாள்(32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.

    நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

    அப்போது அவர் வீட்டின் அருகே மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் ஆனந்த் சாக்கடையை அடைப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அறுந்து தொங்கிக்கொண்டிருந்த வயர் திடீரென்று ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் ஆனந்த் உடலைக் கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்துபோன ஆனந்த்க்கு சுந்தரி (35) என்ற மனைவியும், சார்யா(11) என்ற மகனும், அனுஷ்கா என்ற மகளும் உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் கஜா புயலுக்கு மேலும் ஒருவர் பலியானர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 36). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு ரெங்கநாதன் வேலை முடிந்து நெய்வேலியில் இருந்து பாப்பன்குப்பத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அந்த நேரத்தில் கஜா புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் ரெங்கநாதன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மருங்கூர் அருகே வந்தபோது பலத்த காற்றால் சாலையோரம் இருந்த வேப்பமரம் ஒன்று ரெங்கநாதன் மீது சாய்ந்து விழுந்தது. இதில் ரெங்கநாதன் மோட்டார் சைக்கிளுடன் வேப்ப மரத்தின் இடிபாடுக்குள் சிக்கி கொண்டார். சிறிது நேரத்தில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த முத்தாண்டிகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி ரெங்கநாதனின் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த ரெங்கநாதனின் குடும்பத்தினருக்கு தாசில்தார்கள் ஆறுமுகம், பூபாலசந்திரன், துணை தாசில்தார்கள் தனபதி, சிவராமன் மற்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  #rain #gajacyclone
    Next Story
    ×