search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 2300 அலங்கார ஆமை பறிமுதல்
    X

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 2300 அலங்கார ஆமை பறிமுதல்

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2300 அலங்கார ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் கொண்டு வந்த அட்டை பெட்டிகளில் ஏராளமான அலங்கார ஆமைகள் இருந்தன.

    மொத்தம் 5 அட்டை பெட்டிகளில் 2 ஆயிரத்து 300 ஆமைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    ஆமைகள் எங்கிருந்து யாருக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று முகமது யூனுசிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சென்னையில் இருந்து ஆங்காங்குக்கு செல்லும் விமானத்தில் அமெரிக்க டாலர் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த செந்தில் அரசு என்பவரது கைப்பையில் கட்டு கட்டாக ரூ.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை.

    இதையடுத்து அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்து செந்தில் அரசிடம் விசாரித்து வருகின்றனர்.

    இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அவரது காலணியில் மறைத்து வைத்து 300 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்தனர். தங்க கடத்தல் தொடர்பாக மீனாட்சி சுந்தரத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
    Next Story
    ×