search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு- அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நீடிப்பு
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு- அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நீடிப்பு

    சபரிமைலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். #Sabarimala
    சென்னை:

    சபரிமைலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    இந்த தீர்ப்பை அமல்படுத்தப்போவதான கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தநிலையல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இது போல் தமிழ்நாட்டிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கால்நடை மருத்துவமனை முன்பு உள்ள அம்மை அழைக்கும் கோயில் விநாயகர் அய்யப்பன் கோவில் சாமிக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் அய்யப்பன் படத்துடன் சரண கோ‌ஷமிட்டனர்.

    பிறகு அய்யப்ப பக்தர்கள் கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோயில் மண்டபத்திற்கு சென்று அங்கு அய்யப்பன் படத்துக்கு பூஜை செய்து வழிப்பட்டனர்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு பரிலீசினை செய்யம்படி கோ‌ஷமிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டி கூட்டுப் பிரார்த்தனையுடன் கூடிய ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை தொடங்கியது.

    சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பெண்கள், பக்தர்கள், குருசாமிகள், திரளாக கலந்து கொண்டனர்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் பாரம்பரியத்தை பாதுகாக்க வலியுறுத்தி அச்சன்கோவிலில் பொதுமக்கள் ஊர்வலம் நடந்தது. அச்சன்கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் ஆலோசனை கமிட்டி மற்றும் ஆபரண பெட்டி வரவேற்பு குழு சார்பில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. அச்சன்கோவில் நடைப்பந்தலில் தொடங்கிய இந்த ஊர்வலம் நகர் முழுவதும் சுற்றி கோவிலில் முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் 50 வயதுக்கு மேல் சபரிமலைக்கு செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் ஆரியங்காவிலும் அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

    சபரிமலையில் பாரம்பரியமிக்க புனித தன்மை காக்கப்பட வேண்டும், பெண்கள் தரிசனம் செய்ய பழைய நடைமுறை நீடிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் மாவட் டம் சிதம்பரம் அண்ணா மலை நகரில் உள்ள அய்யப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சபரிமலையில் பழைய நடைமுறை தொடர வேண்டி அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வேண்டினர். அய்யப்ப பாடல்கள் பாடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் மந்தார குப்பத்தில் உள்ள புவனேஷ்வரி அம்மன் கோவிலில் அகில இந்திய பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாலக்காட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் வந்தார். அப்போது பாலக்காடு, ஏலப்புள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் பா.ஜனதாவினர் கறுப்பு கொடி காட்டி கோ‌ஷம் போட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #Sabarimala
    Next Story
    ×