search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு- நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
    X

    புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு- நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

    தமிழகத்தை போல் புதுவையிலும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Narayanasamy #congress
    புதுச்சேரி:

    புதுவையில் நடந்து முடிந்த பட்ஜெட் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உதவியாளர், டிரைவர் ஆகியோரை அரசு பணியில் அமர்த்தவில்லை என்றும், தொகுதியில் சட்டமன்ற அலுவலகம் அமைத்து கொடுக்க வேண்டும், தமிழகத்தை போல் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும், புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் எம்.எல். ஏ.க்கள் நலன் குறித்து ஆலோசனை கூட்டம் சட்டமன்றத்தில் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது.

    கூட்டத்துக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து,

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்த ராமன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதாஆனந்த், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், அசோக் ஆனந்து, டி.பி.ஆர்.செல்வம், சந்திர பிரியங்கா, சுகுமாறன், கோபிகா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்ட முடிவில் நவம்பர் மாதம் கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு, மனைபட்டா ஆகியவை தொடர்பாக முடிவு எடுப்பதாகவும், உதவியாளர், டிரைவர், சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றை செய்து தரவும் முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார். #Narayanasamy #congress
    Next Story
    ×