என் மலர்
நீங்கள் தேடியது "Cabinet Decides"
- மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பெண்களுக்கு உதவித்தொகை வழங்க டெல்லி பட்ஜெட்டில் ரூ.5,100 கோடி ஒதுக்கீடு.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி பாஜக ஆட்சி அமைத்ததும் மார்ச் 8-ந்தேதி பெண்கள் வங்கி கணக்கில் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் முதல் அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படவில்லை.
மகளிர் தினமான இன்று டெல்லி பெண்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்பட்டதற்கான மெசேஜ் வருகிறதா? என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிஷி கிண்டல் செய்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.2500 வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களுக்கு உதவித்தொகை வழங்க டெல்லி பட்ஜெட்டில் ரூ.5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
புதுவையில் நடந்து முடிந்த பட்ஜெட் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உதவியாளர், டிரைவர் ஆகியோரை அரசு பணியில் அமர்த்தவில்லை என்றும், தொகுதியில் சட்டமன்ற அலுவலகம் அமைத்து கொடுக்க வேண்டும், தமிழகத்தை போல் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும், புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் எம்.எல். ஏ.க்கள் நலன் குறித்து ஆலோசனை கூட்டம் சட்டமன்றத்தில் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது.
கூட்டத்துக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து,
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்த ராமன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதாஆனந்த், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், அசோக் ஆனந்து, டி.பி.ஆர்.செல்வம், சந்திர பிரியங்கா, சுகுமாறன், கோபிகா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில் நவம்பர் மாதம் கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு, மனைபட்டா ஆகியவை தொடர்பாக முடிவு எடுப்பதாகவும், உதவியாளர், டிரைவர், சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றை செய்து தரவும் முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார். #Narayanasamy #congress

புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளார் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையம் ஆகியவற்றுக்கும் கருணாநிதி பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கப்படும்.
புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வார அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான மணலை அங்கிருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்காக மாட்டு வண்டி ஒரு லோடுக்கு 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிராக்டருக்கு 100 ரூபாய், லாரிக்கு 150 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கொம்யூன் பஞ்சாயத்து வளர்ச்சிக்காக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #PondiCabinet #Karunanidhi






