search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் கடலில் தடையை மீறி குளித்த பக்தர்கள்
    X

    திருச்செந்தூர் கடலில் தடையை மீறி குளித்த பக்தர்கள்

    திருச்செந்தூர் கடலில் குளிப்பதற்கு தடை இருப்பதை அறியாமல் குளித்த பக்தர்களிடம் போலீசார் தடை இருப்பதை நினைவூட்டி கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.
    திருச்செந்தூர்:

    தென் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு வரையிலும் கடல் அலைகள் 8½ அடி முதல் 10½ அடி உயரம் வரையிலும் எழுந்து ஆர்ப்பரிக்கும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்து உள்ளது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கோவில் கடற்கரைக்கு செல்லும் பாதைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் மற்றும் கோவில் காவலாளிகள் கண்காணித்தனர்.

    பள்ளிக்கூடங்களில் தேர்வு முடிந்ததால், ஏராளமானவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள், கோவில் நாழிக்கிணற்றில் புனித நீராடி விட்டு, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கடலில் அலைகள் சீற்றமில்லாமல் வழக்கம்போல் இயல்பான உயரத்திலேயே எழும்பி வந்தன. இதனால் தடை இருப்பதை அறியாமல் வழக்கம்போல பக்தர்கள் குளித்தனர். இதையடுத்து காவல்பணியில் இருந்த போலீசார் அங்கு குளித்த பக்தர்களிடம் தடை இருப்பதை நினைவூட்டி கடலில் குளிக்கவேண்டாம் என அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து பக்தர்கள் வெளியே வந்த‌னர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
    Next Story
    ×