search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலர் தினத்தையொட்டி கலப்பு திருமணம் செய்துகொண்ட குடும்பத்தினர் சந்திப்பு
    X

    காதலர் தினத்தையொட்டி கலப்பு திருமணம் செய்துகொண்ட குடும்பத்தினர் சந்திப்பு

    திருச்சி அருகே கலப்பு திருமண தம்பதியர் சந் திப்பு நிகழ்ச்சியில் 4 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
    திருவெறும்பூர்:

    காதலர் தினம் நாளை மறுநாள் (14-ந்தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் காதலர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இதனி டையே காதலர் தினத்திற்கு வழக்கமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் காதலர் தினத்தையொட்டி திருச்சி அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட குடும்பங் கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் புதிய இணை ஏற்பு மற்றும் இணை தேடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்சுடர் தலைமை தாங்கினார். குணசேகரன் வரவேற்றார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    கலப்பு திருமணம் செய்த தம்பதியரின் வாழ்க்கைக்கு உதவுதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக 8-வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர், தேனி, திருச்சி, சென்னை மாவட்டங்களை சேர்ந்த 4 ஜோடிகளுக்கு சுய மரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    இதில் தி.க.வின் தலைமை கழக பேச்சாளர் பூவை புலி கேசி, பொதுக்குழு உறுப்பினர் சேகர், என்ஜினீயர் தங்கமணி உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினர். முடிவில் பொற்கொடி நன்றி கூறினார்.

    நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கலப்பு திருமண தம்பதியர், ஒருவருக்குகொருவர் கலந்துரையாடி, தாங்கள் வசிக்கும் ஊர், பார்க்கும் வேலை, காதல் ஏற்பட்டது எப்படி? கலப்பு திருமணத்தால் தங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் என்னென்ன? தற்போது குடும்பத்தினரின் ஆதரவு உள்ளதா? என்று பல்வேறு தகவல்களை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கலப்பு திருமணத்தை ஆதரித்து கோர்ட்டு உத்தரவிட்ட நிலையிலும், தமிழகத்தில் இன்னும் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் திருச்சியில் கலப்பு திருமணம் செய்த குடும்பத்தினர் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. #tamilnews
    Next Story
    ×