search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைதானத்தில் அரைகுறை ஆடையுடன் ஓடிய இளம் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பிய லிவர்பூல் வீரர்கள்
    X

    மைதானத்தில் அரைகுறை ஆடையுடன் ஓடிய இளம் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பிய லிவர்பூல் வீரர்கள்

    யூரோ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியின்போது மைதானத்தில் அரைகுறை ஆடையுடன ஓடிய இளம் பெண்ணுக்கு லிவர்பூல் வீரர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த வாரம் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் லிவர்பூல் - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

    போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும்போது ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் 22 வயது இளம் பெண்ணான கென்சே அரைகுறை ஆடையுடன் பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் புகுந்து ஓடினார். இதனால் ரசிகர்களும், வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.



    தன்னுடைய ஆண் நண்பரின் இணைய தளத்தை பிரபலப்படுத்தும் நோக்கத்திற்காகவே மைதானத்தில் ஓடினேன் என்றார். அதுவரை பிரபலமாகாத அவரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட், அதன்பின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளதாம்.

    ரசிகர்கள் அவருக்கு குறும்பாக மெசேஜ் செய்து வரும் நிலையில், லிவர்பூல் அணியின் சில வீரர்களும் ஜொல்லு விடும் வகையில் மெசேஜ் அனுப்பியதாக கின்சே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கின்சே கூறுகையில் ‘‘நான் எந்தவொரு வீரரின் பெயரையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், இரண்டு மூன்று லிவர்பூல் வீரர்கள் எனக்கு மெசேஜ் அனுப்பினர். அதில் ஒருவர் எமோசனான தகவலை அனுப்பியிருந்தார். மற்றொருவர் போட்டியின்போது நான் உன்னைப் பார்த்தேன் என்று தெரிவித்திருந்தார்.

    நான் உண்மையாக கூற வேண்டுமென்றால், அவர்களுடைய பக்கத்தை கிளிக் செய்யும் வரை அவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்கு ஏற்கனவே ஆண் நண்பர் இருப்பதால் அந்த மெசேஜ்களுக்கு பதில் அளிக்கவில்லை.



    மைதானத்தில் நுழைந்து ஓடியதற்காக அவருக்கு ஐந்து மணி நேரம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இருந்தாலும் 3.8 மில்லியன் பவுண்டு மதிப்பிற்கு விளம்பரம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்று பல்வேறு இடங்கில் ஓடியுள்ளதாக கின்சே தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×