search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூரோ சாம்பியன்ஸ் லீக்"

    பார்சிலோனா ரசிகர்களுக்கான டிக்கெட் விலையை உயர்த்திய நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு மானிய விலையில் டிக்கெட் வழங்குகிறது. #UCL #ManUnited
    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஒன்றில் பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டில் அடுத்த மாதம் 11-ந்தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

    2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான நவு கேம்ப் மைதானத்தில் 17-ந்தேதி நடக்கிறது. இரண்டு அணி ரசிகர்களும் போட்டிகளை பார்க்க இங்கிலாந்துக்கும், ஸ்பெயின் நாட்டிற்கும் செல்வார்கள்.

    2-வது லெக் போட்டியை பார்ப்பதற்காக மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு பார்சிலோனா 4610 டிக்கெட்டுக்கள் ஒதுக்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 102 பவுண்டு (134 டாலர்) விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தொகை மிகவும் அதிகம். அதனால் போட்டியை புறக்கணிப்போம் என்று மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

    இதனால் முதல் லெக் போட்டியை ஓல்டு டிராஃபோர்ட் வந்து பார்க்க வரும் பார்சிலோனா ரசிகர்களுக்கான டிக்கெட் விலையை மான்செஸ்டர் யுனைடெட் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதில் கிடைக்கும் வருமானத்தை நவு கேம்ப் செல்லும் ரசிகர்களுக்கான டிக்கெட்டிற்கு மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் 2-வது லெக்கில் லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது. #UCL #Barcelona
    கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.

    ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லியோன் அணிகள் மோதின. லியோன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது.

    சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். 31-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் பார்சிலோனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58-வது நிமிடத்தில் லியோன் அணியின் லூகாஸ் கோல் அடித்தார். 78-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். 81-வது நிமிடத்தில் ஜெரார்டு பிக்காய் ஒரு கோலும், 86-வது நிமிடத்தில் டெம்பேல் ஒரு கோலும் அடித்தனர். இதனால் பார்சிலோனா 5-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    இரண்டு ஹெட்டர், ஒரு பெனால்டி என ஹாட்ரிக் கோல் அடித்து யுவான்டஸ் அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
    கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.

    அதன்படி யுவான்டஸ் - அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் ஆட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் அட்லெடிகோ அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்லெடிகோ 2-0 என யுவான்டஸை வீழ்த்தியிருந்தது. ரொனால்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2-வது லெக் யுவான்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மூன்று கோல்கள் அடித்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் யுவான்டஸ் களம் இறங்கியது.

    சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்தனர். இதனால் யுவான்டஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தின. பந்து யுவான்டஸ் வீரர்கள் கால்களுக்கு இடையிலேயே சுழன்று சுழன்று வந்தது. அடிக்கடி அட்லெடிக் மாட்ரிட் கோல் கம்பத்தை நோக்கி பந்து சென்றது. என்றாலும் கோல் விழவில்லை.

    இறுதியாக ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 4-வது நிமிடத்தில் அதாவது, ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி மேலும் ஒரு கோல் அடித்தார்.



    இதனால் யுவான்டஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டு லெக்கிலும் சேர்த்து 2-2 என இரு அணிகளும் சமமாக இருந்ததால், கோல்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் யுவுான்டஸ் மிகவும் கவமான செயல்பட்டது. ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் யுவுான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியான பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

    கிறிஸ்டியோனோ ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் யுவான்டஸ் 3-2 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் நான்கு நிமிடங்கள் மிகச்சிறந்த வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. அட்லெடிகோ மாட்ரிட் அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாததால் யுவான்டஸ் 3-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம் #Barcelona
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ‘பி’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் பார்சிலோனா - டோட்டன்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே பார்சிலோனா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. டோட்டன்ஹாம் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற நிலையில் களம் இறங்கியது.

    ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஓஸ்மானே டெம்பேல் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா முதல்பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் டோட்டன்ஹாம் அணியால் நீண்ட நேரம் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில்தான் லூகாஸ் மவுரா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. பின்னர் ஆட்டம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    பார்சிலோனா நான்கு வெற்றி, இரண்டு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டோட்டன்ஹாம், இன்டர் மிலன் அணிகள் 6 போட்டிகளில் தலா இரண்டு வெற்றி, டிரா, தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றது. கோல் அடித்தது, கோல் விட்டுக் கொடுத்ததிலும் சமமாக இருந்தது. அவர்களுக்கிடையிலான ஆட்டத்தை கணக்கிட்டு டோட்டன்ஹாம் 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    ×