search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை போட்டியில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனி- குவியும் பாராட்டுக்கள்
    X

    உலக கோப்பை போட்டியில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனி- குவியும் பாராட்டுக்கள்

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, உலக கோப்பை போட்டியில் நாடுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தியாவின் துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதிக்கப்பட்டிருந்த கிளவுசை அணிந்து விளையாடினார்.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
     
    இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 122 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச்செய்தார்.

    இப்போட்டியில் டோனியின் கிளவ்ஸில் இருக்கும் குறியீடு ஒன்று தற்போது அனைவராலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.  

    நேற்றைய ஆட்டத்தில் டோனி கீப்பிங் செய்த போது அணிந்திருந்த கிளவ்ஸில் இந்தியாவின் துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் என்பதாகும்.

    இதை டோனியின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனை அடுத்து அனைத்து தரப்பிலிருந்தும் டோனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
     
    கடந்த 2011 ஆம் ஆண்டு டோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து டோனி 2015 ஆம் ஆண்டு துணை ராணுவ பிரிவில் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×