
பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸிங் செய்யும்போது கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ், ஜாப்ரா ஆர்சர் ஆகியோர் களத்தில் இருந்தனர். பிராவே கடைசி ஓவரை சிறப்பாக வீசி பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோரை வீழ்த்தி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால் பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ கூறுகையில் ‘‘கேப்டன் எம்எஸ் டோனியின் ஆற்றலை நான் எடுத்துக் கொள்கிறேன். அவர் எப்போதுமே என்னை நேர்மறையாகவே ஊக்குவிப்பவர். அவருடன் நான் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்வேன். ஏனென்றால், அவர் எனது பேட்டிங் பணியை எளிதாக்கிவிடுவார். அவர் எதிரணியை நெருக்கடிக்குள் வைத்திருந்தார்’’ என்றார்.