search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: டீன் ஜோன்ஸ்
    X

    இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: டீன் ஜோன்ஸ்

    ஆஸ்திரேலிய அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று நான் நினைக்காததற்காக வருந்துகிறேன் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தது.

    முதல் போட்டியில் 56 ரன்களும், 2-வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 113 ரன்களும் அடித்து ஒரு வீரராக இந்தியாவை தோற்கடித்தார்.

    ஆஸ்திரேலியாவால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று நான் நினைத்தது கூட கிடையாது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரரும், டிவி வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில் ‘‘நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த ரிசல்ட் வரும் என்று நான் பார்க்கவில்லை. இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் வல்லமை இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. வலுவான டி20 கிரிக்கெட் அணியான இந்தியாவிற்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.’’ என்றார்.
    Next Story
    ×