search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் குறித்து சர்ச்சை: ஹர்திக் விளையாட்டு பையன் - பாண்டியா தந்தை பேட்டி
    X

    பெண்கள் குறித்து சர்ச்சை: ஹர்திக் விளையாட்டு பையன் - பாண்டியா தந்தை பேட்டி

    பெண்களுக்கு எதிரான சர்ச்சை குறித்து ஹர்திக் பாண்டியாவின் தந்தை அவன் ஒரு விளையாட்டு பையன் என கூறியுள்ளார். #KLRahul #HardikPandya
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெலிவிசன் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தனர்.

    பல பெண்களுடன் சுற்றியது பற்றியும், பெண்கள் பற்றி தவறாக பேசியதும் சிக்கலை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் இருவரிடம் விளக்கம் அளிக்குமாறு கிரிக்கெட் வாரியம் முதலில் கேட்டுக் கொண்டது. இதை தொடர்ந்து அவர்கள் பெண்கள் குறித்து கருத்துக்கு வருத்தம் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விசாரணை முடியும் வரை இருவரையும் ‘சஸ்பெண்டு’ செய்து கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதை தொடர்ந்து இருவரும் உடனடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்புகிறார்கள்.

    பெண்கள் குறித்த அவதூறு கருத்தால் ஹர்திக் பாண்டியாவை உடற்பயிற்சி உபகரணி உற்பத்தி நிறுவனம் தனது விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியுள்ளது.

    ஹர்திக் பாண்டியா, ராகுல் மீதான நடவடிக்கை சரியானதே என்று முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது போன்ற வி‌ஷயங்களை பற்றி நாங்கள் நண்பர்களுடன் கூட பேசமாட்டோம். ஆனால் ஹர்திக் பாண்டியாவும், லோகேஷ் ராகுலும் பலரும் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படி பேசியுள்ளர்.

    பாண்டியா அணிக்குள் வந்து எத்தனை நாட்கள் ஆகிறது. அணியின் கலாச்சாரம் பற்றி அவர் எப்படி பேச முடியும். சஸ்பெண்டு செய்தது சரி தான். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மிக சரியான நடவடிக்கை எடுத்துள்ளது பி.சி.சி.ஐ இப்படி தான் கறராக இருக்க வேண்டும். இந்த தடை எதிர்பார்த்தது தான். எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

    இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

    பாண்டியா, ராகுலின் முறையான கருத்துக்களை ஆதரிக்க மாட்டோம் என்று விராட்கோலி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கருத்தை அவரது தந்தை ஹிமான்ஷி பாண்டியா நியாயப்படுத்தி உள்ளார். அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    எனது மகனின் கருத்தை படிக்காமலே மக்கள் கருத்து கூறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும்.

    எனவே அந்த பார்வையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவன் பேசினான். ஆகவே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு தீவிரமாக விவாதிக்க கூடாது எனது மகன் ஒரு வெகுளியான பையன். அவர் இயல்பிலேயே விளையாட்டுத் தனமாக இருப்பான்.

    இவ்வாறு அவரது தந்தை கூறியுள்ளார். #KLRahul #HardikPandya
    Next Story
    ×