search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மித், வார்னர் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல: கவாஸ்கர் காட்டமான பதில்
    X

    ஸ்மித், வார்னர் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல: கவாஸ்கர் காட்டமான பதில்

    ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்மித் மற்றும் வார்னர் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல என்று கவாஸ்கர் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சிட்னி டெஸ்டில் இரண்டு நாட்கள் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

    இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. சிலர் இந்திய அணியை பாராட்டுவதைவிட, ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘இருவரும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல’’ என்று கவாஸ்கார் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் விளையாடியது இந்தியாவின் தவறல்ல. இருவரின் தடையை அவர்களால் குறைத்திருக்க முடியும். ஆனால் ஒரு வருடத்தடை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு நல்லது என்று நினைத்துள்ளனர். கிரிக்கெட் போட்டியை தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் வீரர்களுக்கு இது உதாரணமாக இருக்கும் என்பதால் இதை எடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனையைப் படைத்துள்ளது.’’ என்றார்.
    Next Story
    ×