search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின் முக்கியமான வீரர்: காயத்தை குணப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்- விராட் கோலி
    X

    அஸ்வின் முக்கியமான வீரர்: காயத்தை குணப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்- விராட் கோலி

    இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரர் அஸ்வின், அவர் காயத்தை குணப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அஸ்வின் 86 ஓவர்கள் வீசி 6 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டிற்கு இந்திய அணி தயாராகும்போது, தனக்கு இடது பக்கம் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். அஸ்வின் இல்லாத காரணத்தினாலும், பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்ததாலும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடியது.

    மெல்போர்னில் ஜடேஜா முன்னணி சுழற்பந்து வீச்சாளராக களம் இறங்கினார். நாளை தொடங்கும் சிட்னி டெஸ்டில் சுழற்பந்து முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால 13 பேர் கொண்ட இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

    நாளை போட்டி தொடங்குவதற்கு முன்புதான் ஆடும் லெவன் அணியில் அஸ்வின் இடம்பிடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா மற்றும இங்கிலாந்து தொடரின்போது அஸ்வினுக்கு ஏற்பட்ட அதே காயம்தான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. காயத்தை குணப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா தொடரின்போது எந்த காயத்தால் அவதிப்பட்டாரோ, அதே காயத்தால் தற்போது பாதிப்படைந்திருப்பது துரதிருஷ்டவசமானது. மற்றவர்களை விட அதிக அளவில் காயம் அடைந்துள்ளார். அதை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

    பிசியோ மற்றும் பயிற்சியாளர்கள் அஸ்வினிடம் காயம் குறித்து பேசினார்கள். அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். டெஸ்ட் அணியில் முக்கிய பாங்காற்றக்கூடியவர். அவர் 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். டெஸ்ட் போட்டியில் அவரால் எங்களுக்கு அதிக அளவில் பங்களிப்பை அளிக்க முடியும்’’ என்றார்.
    Next Story
    ×