search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டி20 கிரிக்கெட்- ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153/3- மழையால் ஆட்டம் நிறுத்தம்
    X

    முதல் டி20 கிரிக்கெட்- ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153/3- மழையால் ஆட்டம் நிறுத்தம்

    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    வீரர்கள் விவரம்:-

    இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், டி'ஆர்கி ஷார்ட், அலெக்ஸ் கேரி, பென்மெக்டர்மட், ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரிவ் டை, ஆடம் ஜம்பா, பெரென்டோர்ப், ஸ்டேன்லேக்.



    டி ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் 7 ரன் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் கிறிஸ் லின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆரோன் பிஞ்ச் 24 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். கிறிஸ் லின் 20 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 37 ரன்கள் விளாசினார். இரண்டு பேரையும் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.

    4-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். குறிப்பாக குருணால் பாண்டியா பந்தில் சிக்சராக விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.



    10 ஓவரில் 75 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலியா 15 ஓவரில் 135 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் குவித்தது. குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND #ViratKohli
    Next Story
    ×