search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை - இலங்கை அணி வெற்றி பெற 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
    X

    ஆசிய கோப்பை - இலங்கை அணி வெற்றி பெற 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 262 ரன்களை வங்காளதேசம் இலக்காக நிர்ணயித்துள்ளது. #AsiaCup2018 #BANvsSL
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று தொடங்குகியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன.
     
    முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதைத்தொடர்ந்து, வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் லிடன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.  

    ஆட்டத்தின் முதல் ஓவரின் 5-ம் பந்தில் லிடன் தாஸ் ஆட்டமிழந்து வெளியேற, கடைசி பந்தில் ஷாகிப் அல் ஹசன் போல்டு ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் லக்மல் வீசிய இரண்டாவது ஓவர் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது கையை பதம் பார்த்தது. இதனால் வலியில் துடித்த தமிம் இக்பால் (2) ரன்களோடு ரிட்டையர்டு ஹர்ட் முறையில் ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பிவிட்டார்

    இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணியில் மிதுன் (63), மகமுதுல்லா (1), உசைன் (1), மிராஜ் (15), மோர்தாசா (11), ருபேல் (2), ரஹ்மான் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் 144 (11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) என அடித்து விளையாடி ரன்களை குவித்து ஆட்டமிழந்துள்ளார்.  அவருடன் விளையாடிய தமிம் இக்பால் (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்துள்ளது.

    இதனால் இலங்கை அணி வெற்றி பெற 262 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  #AsiaCup2018 #BANvSL
    Next Story
    ×