search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை : மலிங்கா வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் வங்காளதேசம் - 10 ஓவரில் 22/2
    X

    ஆசிய கோப்பை : மலிங்கா வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் வங்காளதேசம் - 10 ஓவரில் 22/2

    ஆசிய கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேச அணி மலிங்காவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 10 ஓவரில் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. #AsiaCup2018 #BANvSL
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று தொடங்குகியது.
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதைத்தொடர்ந்து, வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் லிடன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.  

    ஆட்டத்தின் முதல் ஓவரின் 5-ம் பந்தில் லிடன் தாஸ் ஆட்டமிழந்து வெளியேற, கடைசி பந்தில் சகிப் அல் அசன் போல்டு ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் லக்மல் வீசிய இரண்டாவது ஓவர் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது கையை பதம் பார்த்தது. இதனால் வலியில் துடித்த தமிம் இக்பால் 2 ரன்களோடு ரிட்டையர்டு ஹர்ட் முறையில் ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பிவிட்டார்

    தொடர்ந்து விளைடி வரும் வங்களதேச அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 24 ரன்கள் மட்டுமே அடித்து திணறி வருகிறது. மலிங்கா இராண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். வங்களதேச அணி சார்பில் ரகிம் 11 ரன்களுடனும், மிதுன் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். #AsiaCup2018 #BANvSL
    Next Story
    ×