search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேப்டனாக வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்- டிராவிட்டை முந்தினார் விராட் கோலி
    X

    கேப்டனாக வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்- டிராவிட்டை முந்தினார் விராட் கோலி

    496 ரன்களை தாண்டும்போது வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் குவித்த டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார் விராட் கோலி. #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    முதல் டெஸ்டில் சதத்துடன் 200 ரன்களும், 3-வது டெஸ்டில் சதத்துடன் 200 ரன்களும் அடித்தார். லார்ட்ஸ் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 40 ரன்கள் அடித்தார். ஆகமொத்தம் மூன்று டெஸ்டிலும் 440 ரன்கள் குவித்தார்.

    தற்போது 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் 486 ரன்கள் அடித்திருந்தார். 2-வது இன்னிங்சில் 11 ரன்களை கடந்த போது 497 ரன்கள் எடுத்திருந்தார்.



    இதன்மூலம் இந்திய அணி கேப்டனாக வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2006-ல் 496 ரன்கள் குவித்ததே அதிக பட்ச ஸ்கோராக இருந்தது.

    தற்போது விராட் கோலி அதை முறியடித்துள்ளார். மேலும் 2014-15-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான  தொடரில் 449 ரன்கள் குவித்து 3-வது இடத்தில் உள்ளார்.

    கவாஸ்கார் 1982-83-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 434 ரன்களும், 1990-ல் இங்கிலாந்திற்கு எதிராக அசாருதீன் 426 ரன்களும் குவித்துள்ளனர்.
    Next Story
    ×