search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூப்பர் கோப்பை கால்பந்து- ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன்
    X

    சூப்பர் கோப்பை கால்பந்து- ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன்

    சூப்பர் கோப்பை கால்பந்தில் ரியல் மாட்ரிட்டை 4-2 என வீழ்த்தி அட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. #RealMadrid #AtleticoMadrid
    சூப்பர் கோப்பை கால்பந்து சாம்பியனுக்கான ஆட்டம் எஸ்டோனியாவில் நேற்று நடைபெற்றது. இதில் ஐரோப்பிய சாம்பியன் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியும், ஐரோப்பா லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற அட்லெடிகோ மாட்ரிட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியதற்குப் பிறகு முதன்முறையாக மிகப்பெரிய தொடரை சந்தித்து. ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் அட்டிலெடிகோ மாட்ரிட் அணியின் டியேகோ கோஸ்டா முதல் கோலை பதிவு செய்தது. 27-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா பதில் கோல் அடித்தார்.



    இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1  என சமநிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். 79-வது நிமிடத்தில் டியேகோ கோஸ்டா கோல் அடித்தார். இதனால் 2-2 என ஸ்கோர் சமநிலைப் பெற்றது. கடைசி 11 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இதில் 98-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட்டின் நிகுயெஸ், 104-வது நிமிடத்தில் கோக் ஆகியோர் கோல் அடித்ததால் அட்டிலெடிகோ மாட்ரிட் 4-2 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    Next Story
    ×