search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல். இறுதிப் போட்டியில் நுழைவது யார்? 2-வது தகுதி சுற்று போட்டியில் கோவை-மதுரை இன்று மோதல்
    X

    டி.என்.பி.எல். இறுதிப் போட்டியில் நுழைவது யார்? 2-வது தகுதி சுற்று போட்டியில் கோவை-மதுரை இன்று மோதல்

    இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டிதொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று மாலை நடந்த முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதே மைதானத்தில் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டியில் கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணி காரைக்குடி காளையை 24 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெளியேற்றியது.

    இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர்-2) இன்று நத்தத்தில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த மதுரை பாந்தர்ஸ் அணியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மதுரை லீக் ஆட்டத்தில் 7 போட்டியில் 5 வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்தது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் நிர்ணயித்த 203 ரன் இலக்கை நோக்கி விளையாடிய மதுரை 128 ரன்னில் சுருண்டது.

    இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முழு திறமையை வெளிபடுத்துவது அவசியம். அந்த அணியில் அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், ரோகித், காவுசிக், தன்வார், வருண் சக்ரவர்த்தி, ரகில்ஷா போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும் பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான், ரோனித், அந்தோணிதாஸ், அகில்ஸ்ரீநாத் அஜித்ராம், அஸ்வின் வெங்கடராமன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    வெளியேறுதல் சுற்றில் காரைக்குடியை வீழ்த்தி உள்ளதால் கோவை கிங்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது. அதே உத்வேகத்துடன் விளையாட முயற்சிக்கும்.

    இறுதிப் போட்டிக்கு நுழைய இரு அணிகளும் மல்லு கட்டும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    Next Story
    ×